24.11. 2022 அன்று, சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய பெண் காவலர் சுசீலா அரசு பேருந்து 48- B இல் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் பயணம் செய்த ஒருவரிடம் இருந்து கைபேசியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற திரு.வி.க நகரை சேர்ந்த ஜாபர் ஷெரீப் (36) என்ற பிரபல வழிப்பறி திருடனை மடக்கிப் பிடித்து திருடப்பட்ட கைபேசியை மீட்டு அவனை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மூன்று மாத கர்ப்பிணியான பெண் காவலரின் இந்த செயல் பொதுமக்கள் இடையே மிகுந்த பாராட்டை பெற்றது.
இன்று (28.11.2022), பெண் காவலர் சுசீலாவை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.