Home அரசியல் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத் திட்டம்!

0
தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத் திட்டம்!

மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆடியோ, வீடியோவுடன் கூடிய நூலகத் திட்டம்

தமிழகத்தில் முதன்முறையாக அமலாகிறது.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி அவர்கள் பொறுப்பேற்ற பின் சிறைவாசிகளின் நலன் சிறை காவலர் நலன் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி வருகிறார் சிறை துறைக்கு பொறுப்பேற்ற பின் புழல் சிறைக்குச் சென்ற அவர் சிறைவாசிகளுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். குறுகிய காலத்திற்குள் அனைத்து மத்திய சிறைகளுக்கும் நேரில் சென்று சிறை காவலர் மற்றும் சிறைவாசிகளின் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மத்திய சிறைகளில் கைதிகளுக் கான நவீன நேர்காணல் அறை பொதுமக்களுடன் பங்களிப்புடன் கூடிய நூலகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக சிறை கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘ சிறை நூலகத் திட்டம்’ ஒன்றை கொண்டு வந்துள்ளார்.

இதன்படி, மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான பெரிய அளவிலான நூலகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது . இந்த நூலகத்திற்கு சுமார் 1 லட்சம் புத்தகங்களை தனிநபர், அமைப்புகள் மூலம் நன்கொடையாக பெறுவது என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சிறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் உள்ளிட்ட சிறைத்துறையினர் முயற்சியில் இலக்கியம், கவிதை,நாவல், புராணம் போன்ற பல்வேறு புத்தகங்களை நன்கொடையாக பெற்று வருகின்றன
மதுரையைச் கூடல்நகரை சேர்ந்த 92 வயது முதியவர் பாலகிருஷ்ணன் என்பவர் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

வழக்கறிஞர்கள், அமைப்பினர் , தனி நபர்கள் என, தங்களால் முயன்றளவு புத்தகங்களை தொடர்ந்து வழங்குகின்றனர். ஈரோடு பகுதியைச் சேர்ந்த இலஞ்சி சமூக நல அமைப்பைச் சேர்ந்த ஜானகி என்பவர் நேற்று சுமார் 1000 புத்தகங்களை மதுரை சிறை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

இவரை சிறைத்துறை நிர்வாகம் பாராட்டியது. இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் சேகரிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் நூலகத் திட்டத்தை தொடர்ந்து அடுத்தக் கட்டமாக கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் புத்தக வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மத்திய சிறையில், கேபிள் வழியாக ‘ ஆடியோ, வீடியோ வுடன் ஒளிபரப்பும் டிஜிட்டல் நூலகத் திட்டம் தொடங் கியுள்ளனர்.

இதன்மூலம் பல்வேறு புத்தகங்களின் கதைகளை முழுமையாக விளக்கும் விதத்தில் ஒளி, ஒலி காட்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சிறைவாசிகள் அவரவர் அறையில் இருந்தபடியே, வீடியோ, ஆடியோ வாயிலாக ஒரு புத்தகம் பற்றிய முழு விளக்கத்தை கதை வடிவிலும், வாசிப்பு நிலையிலும் ஒரே நேரத்தில் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு வருக்கும் முழு புத்தகத்தை படித்து உள்வாங்கிய திருப்தி கிடைக்கும் என, சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியது:

சிறை நூலகத்தைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக ஒரே நேரத்தில் ஒரு புத்தகம் பற்றி அனைத்து கைதிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி, ஒளி வடிவில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 52 டிவிக்கள் (ஆண்கள் பிரிவு ) பெண்கள் சிறையிலுள்ள 4 டிவிக்கள் மூலம் பார்க்க, கேட்க முடியும். நேரத்தை பொறுத்து தினமும் காலை 6.30 முதல் 8, மதியம் 12 முதல் 1.30 மணி வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை இத்திட்டம் செயல்படுத்தப் படும்.

விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, ஆன்மீகம், இலக்கியம், வரலாறு, நீதி போதனை, நன்னெ்றி நூல்கள், கதைகள், நாவல் போன்ற புத்தகங்களை ஆடியோ நூலகம் மூலம் கைதிகளுக்கு கொண்டு செல்வோம். மேலும், காலை நேரத்தில் இலக்கிய வாதிகள், ஆன்மீகவாதிகள், தன்னம்பிக்கை பேச்சாளர் கள், சொற்பொழிவாளர்களின் உரைகளும் வீடி யோவுடன் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம்.

கைதிகள் விரும்பும் புத்தகங்கள், நாவல்களும் முழு விளக்கத்துடன் கொண்டு சேர்க்கப்படும். இதுதவிர, நூலகத்திட்டம் மூலம் கைதிகள் விரும்பும் புத்தகங்கள் அவரவர் அறைக்கே கொண்டு சென்று வழங்கிறோம். இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகங்கை புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உதவியுடன் பொதுமக்களின் பங்களிப்பாக ஆயிரம் புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 9 ராமநாதபுரம் புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உதவியுடன் தனி அரங்கம் அரை எண் 29 புத்தகங்களை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை சிவகங்கை ராமநாதபுரம் தேனி திண்டுக்கல் விருதுநகர் மாவட்ட மக்களும் இந்த அறிய பணியில் பங்கு கொள்ளும் வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள கிளைச் சிறைகளிலும் புத்தகங்களை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள கிளைச் சிறை மற்றும் மாவட்ட சிறைகளில் சென்று புத்தகங்களை வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 0452-2360031 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here