கொரோனா தொற்றால் காவல்துறை ஆய்வாளர் பாலமுரளி சென்னையில் மரணமடைந்தார்
இன்று காலை ஆய்வாளர் பாலமுரளி பணியாற்றிய ஆர்-1 மாம்பலம் காவல்நிலையத்தில் டிஜிபி.திரிபாதி இ.கா.ப, மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இ.கா.ப.,ஆகியோர் பாலமுரளியின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினர் மாலை 5 மணிக்கு, ஆய்வாளர் பாலமுரளியின் மறைவுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் படி டிஜிபி திரிபாதி இ.கா.ப, வேண்டுகோள் விடுத்திருந்தார்
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறையினரும் மாலை 5 மணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்
தமிழக காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி.திரிபாதி இ.ஆ.ப மற்றும் உயர் அதிகாரிகள் 2- நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்