கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பணவடலிச்சத்திரம் காவல்துறையினர்

800

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி,
பணவடலிச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு.வேல்துரை அவர்கள் பொதுமக்களிடம் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், முடிந்தவரை வெளியே எந்தப் பொருளையும் தொட வேண்டாம் என்றும் கூறினார்.மேலும் தங்கள் பகுதிக்கு வெளிமாவட்டங்களில் இருந்து ஏதேனும் புதிய நபர்கள் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் இதன் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் பாதுகாக்க முடியும். மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்தால் மட்டும் போதாது கட்டாயம் தலைக்கவசமும் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here