அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியை தொடங்கி வைத்த திருச்சி சரக காவல் துணைத் தலைவர்..

763

அரியலூர் கயர்லாபாத் அரசு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பழைய கயர்லாபாத் காவல்நிலையத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி உருவாக்கப்பட்டு உள்ளதுஅரியலூர் மாவட்ட காவல் துறைகண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெறற விழாவில் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் முனைவர் Z. ஆனி விஜயா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போக்குவரத்து பயிற்சி பள்ளியை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி அரியலூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.ஜெயக்குமார் மற்றும் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை துணை பொதுமேலாளர்ரவிச்சந்திரன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி சரக காவல் துணை தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி வளாகத்தில்மரக்கன்றுநட்டார்.அப்போது அவர் பேசியதாவது: விபத்துக்கள் அற்ற மாவட்டமாகவும் மிகவும் பாதுகாப்பான மாவட்டமாக அரியலூர் மாற வேண்டும், அதற்கு மக்கள்உறுதுணையாகஇருக்கவேண்டுஎனபேசினார்.இதனையடுத்துபேசிய மாவட்ட காவல்துறைகண்
காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன்
இந்த பள்ளியின் முக்கிய நோக்கம் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களை இந்த பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் அதன் விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரியலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவதே இந்த பள்ளியின் முக்கிய நோக்கமாகும். அதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் . மேலும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் முயற்சியால் தான் இந்த பள்ளி முழு உருவம் பெற்றது என்று கூறினார்.

இறுதியாக போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி உருவாக போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணனுக்கு உதவி புரிந்த தன்னார்வலர் இளைஞர்களுக்கு திருச்சி சரக காவல் துணைத் தலைவர் முனைவர்Z.ஆனி விஜயா பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல்
கண்காணிப்பாளர்சுந்தரமூர்த்தி மற்றும் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி , மாவட்டக் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்
திருமேனி (அரியலூர் உட்கோட்டம்) மோகன்தாஸ் (ஜெயங்கொண்டம் உட்கோட்டம்)மணவாளன்(அரியலூர்ஆயுதப்படை),கயர்லாபாத் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ராஜா, மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here