வழிப்பறிக் கொள்ளையர்களைப் பிடித்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள்..

570

01.08.2020 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி அருகே கடந்த மாதம் லாரியில் தூங்கிக்கொண்டிருந்த கேசவன் (40) என்பவரிடம் அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணம் ரூபாய் 20,000/- மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் தாடிக்கொம்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முனியாண்டி அவர்களிடம் புகார் அளித்தார். இதனையடுத்து திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.அழகர்சாமி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.ஷேக் தாவூத் அவர்கள் தலைமையில் காவலர்கள் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் திண்டுக்கலில் பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்
திரு.அழகர்சாமி அவர்கள்
உதவி ஆய்வாளர் திரு.ஷேக் தாவூத் அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் அவர்கள் முதல்நிலைக் காவலர் திரு.சதீஷ் மற்றும் முதல் நிலை காவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here