திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாத பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் யுனானி மருத்துவர் ஆக தாராபுரத்தில் கிளினிக் வைத்து நடத்துகிறார் இவரது மூன்று மகன்களில் முதல் மகன் முகம்மது ஆசிக் ரஸ்யா நாட்டு வோல்கோகிராட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவப் படிப்பை பயின்று வருகிறார்.

அடுத்த 6 மாதங்களில் மருத்துவக் கல்வியை முடித்து தாராபுரம் திரும்ப உள்ள நிலையில் தனது நண்பர்களுடன் ஓல்கா நதிக்கரையில் சென்றபோது நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக இவருடன் சேர்ந்த நண்பர்கள் உட்பட 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியதாக தகவல் தெரியவந்துள்ளது.
மருத்துவ மாணவர் முகமது ஆசிக் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தாராபுரம் சொக்கநாத பாளையம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
