போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரசு சிமெண்ட் ஆலை கனரக வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

961

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின் படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி அனைத்து சிமெண்ட் ஆலை மற்றும் தொழிற்சாலை கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேட்ச் மற்றும் சுழற்சிமுறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுதமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலை கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போக்குவரத்து விதிமுறைகள் பற்றி குறும்படம் காண்பிக்கப்பட்டு, சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் அணிவதின் அவசியம்,மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டி செல்லும்போது சீட் பெல்ட் அணிவது அவசியம், பாதசாரிகளின் பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக ஓட்டுநர்கள் அனைவரும் சாலை விதிகளை மதிப்போம் ,அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக மாற்றஉறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here