மதுரையில் அங்கொடா லொக்கா தங்கியது உறுதிசெய்யப்பட்டதால் தங்கிய வீடுகளில் தோண்டி சோதனை : சிபிசிஐடி காவல் துறை அதிரடி நடவடிக்கை..!!!

719

இலங்கை கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா மதுரை கூடல்நகர் பகுதியில் இரண்டு மாதங்கள் தங்கியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்தது,இந்நிலையில் அவர் தங்கிய வீடுகளில் ஆயுதம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்து சிபிசிஐடி இரு தினங்களுக்கு முன்பாக வீடுகளில் தரை மற்றும் பாதாளசாக்கடை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோண்டி சோதனை செய்துள்ளனர்,இதில் தற்போது வரைக்கும் எந்தவித ஆயுதங்களும் கிடைக்கவில்லை,இதனிடையே அங்கொடா லொக்காவிற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரனுக்கு இலங்கை பெண் தோழி மூலமாக அங்கொடா லொக்கா தொழிலதிபர் என அறிமுகப்படுத்தபட்டு சிகிச்சை பெறுவதாக மதுரையில் தங்க வைக்கப்பட்டதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது,இதனையடுத்து தந்தை தினகரனின் மூலமாக சிவகாமி சுந்தரிக்கு அங்கொடா லொக்கா அறிமுகம் ஆனது தெரியவந்துள்ளது,மேலும் அங்கொடா லொக்காவின் பின்புலம் குறித்து தனக்கு தெரியாது என சிவகாமி சுந்தரியின் பெற்றோர் சிபிசிஐடி போலிசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது,இதனிடையே அங்கொடா லொக்காவின் கூட்டாளி ஒருவர் மதுரையில் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகிநிலையில் சிபிசிஐடி போலிசார் தேடிவருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here