அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ராஜலட்சுமி, காவல்துறையினரிடம் அளித்த புகாரில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், பெண்கள் குறித்தும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவதூறாக பேசுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது, 4 பிரிவுகளின் கீழ் சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவதூறு பரப்புதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.