டுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு

432

புதுடில்லி: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மதித்து நடக்கும்படி டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கு உத்தரவிட வேணடும் என கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லி உயர்நீதிமன்றத்தில் அமித் ஆச்சார்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனு,மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், பிப்.,25-ல் அமலுக்கு வந்தன.

எனினும் இதை பின்பற்றி நடக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த அவகாசம் மே 25-ம் தேியுடன் முடிந்துவிட்டது. ஆனால் குறைதீர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவை டுவிட்டர் நிறுவனம் இன்னும் செயல்படுத்த வில்லை.

இதனால் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மதித்து நடக்கும்படி டுவிட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.

உடனடியாக இந்தியாவில் குறைதீர் அதிகாரி ஒருவரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here