குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷாபார்த்திபன்!

872

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டில் உள்ளதால் போஸ்கோ வழக்குகளும் குழந்தை திருமணமும் அதிகரித்து உள்ளது அதனை தடுக்க பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையும் காவல்துறை சார்பில் எடுக்கப்படும், காவல்துறையினர் சோர்வின்றி பணிபுரிய அவர்களுக்குத் தேவையான நேரத்தில் விடுமுறை கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்…. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் செய்தியாளர் சந்திப்பில் தகவல்..

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பாலாஜி சரவணன் மாற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நிஷா பார்த்திபனை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில் நேற்று நிஷா பார்த்திபன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெற்றுக்கொண்டார். இந்நிலையில் நிஷா பார்த்திபன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குற்ற நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது, கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டில் உள்ளதால் போஸ்கோ வழக்குகளும் குழந்தை திருமணமும் அதிகரித்து உள்ளது அதனை தடுக்க பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையும் காவல்துறை சார்பில் எடுக்கப்படும், சட்டவிரோத செயல்களான மணல் கடத்தல், கள்ளச்சாராயம் லாட்டரி கஞ்சா விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும், ஆன்லைன் வகுப்பில் பாலியல் குற்றங்களை தடுக்க திருச்சி மண்டல ஐஜி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும், காவல்துறையினர் சோர்வின்றி பணிபுரிய அவர்களுக்குத் தேவையான நேரத்தில் விடுமுறை கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here