புதுக்கோட்டை மாவட்டம்
03.09.2021 கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலிசார் சோதனை செய்ததில் மேலக்காடு பேட்டை வாட்டர் டேங்க் அருகே லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 3350 லாட்டரி சீட்டுகள் கைப்பற்றி வழக்குப்பதிந்து எதிரியை சிறையில் அடைத்தனர்.
சட்டத்துக்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர்களை பிடித்து சிறப்பாக செயல்பட்ட தலைமை காவலர் 1022 ச.எசேக்கியா
முதல்நிலை காவலர் 1543 ந.ஹரிகிருஷ்ணன் மற்றும் காவலர் 2044 ம.செல்வம் ஆகியோரை இன்று 06.09.2021-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.