துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.

354


மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல் 15 கொலை வழக்குகளும் (திருச்சி 4, புதுக்கோட்டை 1, பெரம்பலூர் 2, அரியலூர் 2, தஞ்சாவூர் 5, மயிலாடுதுறை 1) மற்றும் 3 ஆதாயக் கொலை வழக்குகளும் (புதுக்கோட்டை 1, திருவாரூர் 1, மயிலாடுதுறை 1) நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை கண்டுபிடிக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவரால் அழைக்கப்படுகிறார்கள்.
இவ்வழக்குகளை கண்டுபிடித்து தருபவருக்கு அல்லது வழக்குகள் கண்டுப்பிடிக்க பயனுள்ள தகவல்களை தருபவர்களுக்கு சன்மானமாக ஒவ்வொரு வழக்கிற்கும் 10,000 ரூபாய் வெகுமதியாக அளிக்கப்படும்.
இவ்வழக்குகளில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமும் விருப்பம் உள்ள பொதுமக்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :
காவல் துறை தலைவர் அலுவலகம் ,திருச்சி – 0431-2333866.
காவல் துறை துனணத்தலைவர் அலுவலகம், திருச்சி – 0431-2333909.
காவல் துறை துணைத்தலைவர் அலுவலகம், தஞ்சாவூர் – 04362-277477.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here