
பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான தீபாவளியினை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக புதுக்கோட்டை கீழராஜ வீதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் ஜெய் பார்த்தீபன், அன்னை பார்த்திபன், ராதாகிருஷ்ணன், ஓவியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதற்கு புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் குருநாதன், எஸ்.வி.எஸ் ஹீரோ நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் விநியோகத்தை துவக்கிவைத்தனர்.
இதில் ரோட்டரி நிர்வாகிகளும், நகர காவல்துறையினரும் கலந்து கொண்டனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.