சுமார் 12,00,000/- ( பன்னிரெண்டு லட்சம் ) ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 60 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்….

401

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் காவல் நிலையங்களில் பதிவான தொலைந்த போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் சைபர் கிரைம் காவல் துறை மூலம் 60 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் இன்று 01.03.2022 தேதியன்று உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது. கடந்த 22.10.2021 ஆம் தேதி சுமார் 22,00000/- மதிப்புள்ள 110 செல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரால் சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தும், Toll Free No.1930 and website cybercrime.gov.in குறித்தும் தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here