





சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக காவல் துறை முன்னோடியாக உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் சாதி, மதக் கலவரங்கள் இல்லை:
மு.க.ஸ்டாலின்
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் கொடியை வெங்கையா நாயுடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.