புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தாக்குதல் செய்த 30 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனையும் ₹1.20 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதின்றம் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மே.குளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் (30) என்ற இளைஞர் கடந்த 2021 டிசம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பலமுறை பாலியல் தாக்குதல் செய்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, கண்ணன் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ₹1.20 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ₹5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்