புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள லஞ்சமேடு பகுதிகளில் 40 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது
விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக மாவட்ட சிறப்பு பிரிவு காவல் அதிகாரி பாலமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
அதனைத் தொடர்ந்து பாலமுருகன் மற்றும் அவரது குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது லஞ்சமேடு பகுதியைச் சார்ந்த மோகன் என்பவரது மளிகை கடை மற்றும் அவரது வீட்டில் 40 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து முருகன் வயது 26 மற்றும் மோகன் வயது 35 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்
மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது