சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து விடுதியில் தங்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை பார்த்து செல்வதுண்டு, அந்த வகையில் நேற்று ஒரு ஜோடி கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்,இந்நிலையில் காலையில் அறையிலிருந்து வெளியே சென்ற அவர்கள் மாலையில் மீண்டும் அறைக்கு திரும்பி உள்ளனர், இரவு உணவை முடித்த பிறகு அவர்கள் அறைக்கு சென்று ஓய்வெடுத்துள்ளனர், இந்த நிலையில் இன்று காலை அறையில் இருந்து ஆண் மட்டும் அறக்க பறக்க வெளியே ஓடி வந்தார்,அவர் தன்னோடு வந்த பெண் எங்காவது இருக்கிறார எனத் தேடினார், அவரது பரபரப்பை பார்த்து விடுதி நிர்வாகிகள் அவரிடம் விசாரித்தனர்,அப்போது அவர் கூறிய தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது,தனது கைப்பையில் இருந்த ஒன்பது பவுன் நகை காணவில்லை என்றும் அதே நேரத்தில் தன்னுடன் வந்த பெண்ணையும் காணவில்லை எனக்கு கூறினார் எனவே அந்தப் பெண்தான் நகை எடுத்துச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது, இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்,அப்போது நகையை இழந்தவர் நெல்லை டவுனை சேர்ந்த ஆல்பர்ட் (52) கார் புரோக்கர் என்பது தெரியவந்தது, தொழில் விஷயமாக சமூக வலைதளங்களில் எப்போதும் செயல்பாட்டில் இருப்பவர் என்றும் அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடன் தங்கிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, அந்த பெண் தனது பெயர் சத்யா வயது 29 என்றும் சொந்த ஊர் மதுரை என்றும் தெரிவித்திருந்தார், கடந்த மூன்று மாதங்களாக அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்து ஆடல் பாடலுடன் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளேன்,இந்த நிலையில் நேரில் சந்திக்கும் ஆவலோடு அவரை கன்னியாகுமரி அழைத்து வந்தேன், இங்கு நேற்று பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தோம்,சேர்ந்து படங்களும் எடுத்துக் கொண்டோம் அதன் பிறகு இரவில் விடுதிக்கு வந்து தங்கினோம் இந்த நிலையில் இன்று காலை சத்யாவை காணவில்லை, அறையில் எனது கைப்பையில் வைத்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, இரண்டு பவுன் மதிப்புள்ள தங்க மோதிரம் ஆகியவை மாயமாகி உள்ளது, என போலீசாரிடம் தெரிவித்தார்,
மேலும் சத்யாவுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவையும் போலீசாரிடம் கார் புரோக்கர் கொடுத்துள்ளார் அதனை வைத்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர் அந்த பெண் இரவே விடுதிலில் இருந்து சென்று விட்டாரா, அல்லது அதிகாலையில் தான் சென்றாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் அந்தப் பெண் கூறிய பெயர்,ஊர் உண்மைதானா என்பதும் மேலும் இவர் போன்று வேறு யாராவது ஏமாற்றப்பட்டுள்ளார்களா என போலீசார் விசாரணையை முடிக்கி உள்ளனர்.