மதுராந்தகம் அருகே சந்தேகத்தில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது.

70

செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே உள்ள கழனிபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் இவரது மனைவி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுதாமதி வயது 25. இருவரும் மறைமலை நகரில் தனியார் கம்பெனியில் பணி புரியும் போது காதலித்து ஐந்து ஆண்டுகளுக்கு
முன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
நேற்று முன் தினம் துணிகளை
அயன் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இரந்ததாக கூறி சுதாமதிக்கு அவசர அவசரமாக
இறுதி சடங்கு செய்தார்.
ரஞ்சித்தின் மனைவி சுதாமதி கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். என சுதாமதியின் அண்ணன் சதீஷ்குமார் மதுராந்தகம் போலீசாருக்கு புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மதுராந்தகம் போலீசார் சுதாமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பொழுது, பிரேத பரிசோதனையின் போது
சுதாமதியின் தலையில் பலத்த காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து மருத்துவரின் முதல் கட்ட ஆய்வறிக்கையில் அடிப்படையில் மதுராந்தகம் போலீசார் வழக்கு
பதிவு செய்து ரஞ்சித்குமாரிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் ரஞ்சித் குமார் வேலையை முடித்து வீட்டுக்கு வரும்பொழுது சுதாமதி யாருடனோ போனில் பேசியிருந்ததை கண்டு கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து கயிறால் இறுக்கி சுதாமதியை கொலைசெய்துள்ளார். ஆகவே போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here