வி 7 நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் மேற்கு பாரதி சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக கடந்த இரண்டு வருடங்களாக கோதண்டராமன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
விவேக் குமார், 3வது பிளாக், முகப்பேர் மேற்கு என்பவர் தன்னுடைய தாயாரின் வீட்டில் இரண்டாவது தளத்தில் உள்ள கட்டிடத்திற்கு கூடுதல் மின் இணைப்பு கேட்டு 26 10 2022 அன்று ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்குண்டான ஆவணங்களுடன் முகப்பேர் மேற்கில் உள்ள இளநிலை பொறியாளர் கோதண்டராமன் அவர்களை சந்தித்துள்ளார்.
புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கு ரூ.10000 ( பத்தாயிரம்)தனக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என இளநிலை பொறியாளர் கோதண்டராமன் கேட்டுள்ளார்.
இதுகுறித்து விவேக்குமார் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று(14.11.22) 19.00 மணியளவில் அம்பத்தூர் எஸ்டேட் சாலை கோல்டன் பிளாட் பேருந்து நிறுத்தம், போலீஸ் பூத் அருகே ரூ.10000( பத்தாயிரம்) லஞ்சம் பெறும்போது லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. லவக்குமார் தலைமையில் போலீசார் இளநிலை பொறியாளர் கோதண்டராமனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அழைத்துச் சென்றனர்