தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வ .உ. சி நகரைச் சேர்ந்த சுவிஸ் மணி என்ற மணிகண்டன் (32)த /பெ செல்வம் மற்றும் சடையாண்டி நகரை சேர்ந்த சுமோ பாஸ்கரன் என்ற பாஸ்கரன் த /பெ வீராச்சாமி ஆகிய இருவரும் இணையதளத்தில் முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பற்றி மிகவும் தரக்குறைவான ஆபாசமான வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டதாக கூறி போடி தி.மு.க நகர செயலாளர் புதுக்காலணியைச் சேர்ந்த புருஷோத்தமன் த /பெ ராஜு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போடி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்விஸ் மணி என்ற மணிகண்டன்,சுமோ பாஸ்கரன் என்ற பாஸ்கரன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு …
பொது வாழ்வில் உள்ள அரசியல் தலைவர் மற்றும் தமிழகத்தின் முதல் வருமான ஸ்டாலினின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவமரியாதை செய்யும் வகையிலும் மிகவும் ஆபாசமாக பேசி பேசி முகநூல் வீடியோ வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்