திருவண்ணாமலை மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது. மேலும் இந்த ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

821

திருவண்ணாமலை மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது. மேலும் இந்த ஆண்டில் மட்டும் மாவட்டத்தில் 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா, வழுதலங்குணம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை, வயது 55 என்பவர் பலமுறை வழக்கு பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த வரை திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கண்ட நபரின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிசக்கரவர்த்தி,IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி,IAS., அவர்கள் மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்து வேலூர் மத்திய சிறையில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் கடந்த ஐந்தரை மாதத்தில் 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here