யு டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டியில் பாஜகவினர் போலீசில் புகார்
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவதூறு பரப்புதல், அவதூறாக கொச்சையாக காட்சி படுத்துதல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகிய குற்றங்களுக்காக கருப்பர் கூட்டம் என்கிற சமூக வலைதள சேனல்களை கையாள்பவர்கள், உரிமையாளர், கொச்சையாக வீடியோக்களில் பேசுபவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் நகர தலைவர் பாலசுப்பிரமணியன் கிழக்கு காவல் நிலையத்திலும், ஒன்றிய அமைப்பாளர் லட்சுமணன் மேற்கு காவல் நிலையத்திலும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், நகர பொது செயலாளர் முனியராஜ், சீனிவாசன், முன்னாள் நகர துணை தலைவர் நல்ல தம்பி, நகர செயலாளர் அருணசலம், சங்கர், இளைஞர் அணி துணை தலைவர் குருதேவன், ராசு, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.